பணகுடியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-


ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட பணகுடி பகுதிக்‍கு வருகை தந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பணகுடியில் நடைபெற்ற மக்‍கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றியபோது, பேருந்து மற்றும் சாலை வசதிகள் போதிய அளவுக்‍கு இல்லாததால், பொதுமக்‍களும், மாணவ, மாணவியரும் மிகுந்த இன்னலுக்‍கு ஆளாகி வருவதாக தெரிவித்தார். 


Night
Day