பணத்திற்கு டோக்கன் விநியோகம்... விழாவுக்கு கூட்டம் சேர்த்த திமுகவினர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்ட துவக்க விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை டாடா ஏஸ் வாகனங்களிலும், மினி பேருந்துகளிலும் ஆடு, மாடுகளை ஏற்றி வருவது போன்று அழைத்து வந்து, திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

திருவண்ணாமலையை அடுத்த மெய்யூர் கிராமத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பணம் தருவாகக்கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை, டாடா ஏஸ் வாகனங்கள் மற்றும் மினி பேருந்துகளில் கால்நடைகளை ஏற்றி வருவதுபோல் ஏற்றி வந்துள்ளனர் திமுக உடன்பிறப்புகள்.. மேலும், பணத்திற்காக டோக்கனையும் விநியோகித்த அமைச்சரின் விஸ்வாசிகள், பெண்களை உணவுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும் வைத்துள்ளனர். இதனால், உணவு பொட்டலங்களை பெற பெண்கள் முட்டி மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பர அரசின் அமைச்சராக உள்ள எ.வ.வேலு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலைகள் போடப்படுகிறாறோ, இல்லையோ தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலை நகரில் உள்ள 9 சாலைகளையும் அகலப்படுத்தும் பணியை தனது பினாமிகளுக்கு கொடுத்து வருகிறார். இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விளம்பரத்துக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை டாட்டா ஏஸ் வாகனங்கள் மற்றும் மினி பேருந்துகளில் அழைத்து வந்தும், விழா நடத்திய சம்பவம் அங்கிருப்போரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day