பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் - 5 பேர் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே ஒப்பந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக 5 தொழிலாளர்கள் அனல் மின் நிலையம் எதிரே உள்ள மின் கம்பத்தில் ஏறி போராட்டம் செய்தனர். தொடர்ந்து மின் கம்பத்தில் ஏறிய தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக கீழே  இறக்கினர்.

Night
Day