பணி நீக்கம் அபாயத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் 1,000 ஊழியர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி்யுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 500 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ள மீண்டும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும்  ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பணி நீக்கம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில்  இந்த நடவடிக்கையின் மூலம் லாபத்தை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும்  அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Night
Day