பண்பொழியில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில் பண்பொழி பகுதியில் மக்கள் வெள்ளத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சியுரை ஆற்றினார்


தென்காசி மக்கள் குடிதண்ணீருக்காக மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அதற்கான நல்ல திட்டங்கள் எதையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. தற்போது தான் பண்பொழியில் அடவி நயினார் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்க உள்ளதாக கூறியிருக்கிறார்கள். அதற்காக ரூ.12 கோடிக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அதனை எந்தளவில் சரியாக செய்து முடிப்பார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்!

யானை, காட்டுப்பன்றி போன்றவற்றால், மலையடிவார விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவைப் போல, தமிழ்நாட்டிலும் வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தமிழக அரசு இதனைப் பரிசீலித்து விவசாயிகளைக் காக்க வலியுறுத்துகிறேன்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன. ஜல்லி கற்களை கேரளாவிற்கு கடத்திச் செல்லும் கனிமவள கொள்ளையர்களால் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல, இப்பகுதி மக்களுக்கு சரியான சாலை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து வந்துள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் சட்டசபையில் சொல்கிறார்கள். ஆனால் அதுபோல எந்தவொரு புதிய நிறுவனமும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதாகத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. திமுக அரசு மக்களிடம் தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறது.

தமிழகத்தில் போதிய பேருந்து வசதி இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுவதை சுட்டிக் காட்டினால், போக்குவரத்துத்துறை அமைச்சர் அப்படி எல்லாம் இல்லை என தொலைக்காட்சியில் பதில் சொல்கிறார். வெறும் தொலைக்காட்சியில் பதில் கூறினால் போதுமா? உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெரியும். திமுக தொடர்ந்து பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது.

இந்த அரசாங்கம் ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்கள் நமக்கு வாக்களித்து விட்டார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை எதுவுமே செய்ய முடியாது என்ற மமதையில் இருக்கிறார்கள்.
நாங்கள் அமைக்கப்போவது மக்கள் ஆட்சி!

நம்முடைய ஆட்சி வந்ததும் மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் செய்து கொடுப்போம். அதை எங்களது ஆட்சி என சொல்ல மாட்டோம், மக்கள் ஆட்சி என்று தான் சொல்வேன். மக்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்போம்.


Night
Day