எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழக முன்னாள் அமைச்சரும், கழக மூத்த நிர்வாகியுமான பண்ருட்டி திரு. எஸ்.ராமச்சந்திரனின் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக முன்னாள் அமைச்சரும், கழக மூத்த நிர்வாகியுமான பண்ருட்டி திரு. எஸ்.ராமச்சந்திரனின் 88-வது பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர் - அன்பு சகோதரர் பண்ருட்டி திரு.எஸ். ராமசந்திரன் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.