பத்திரப் பதிவு கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு பொதுமக்கள் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு பத்திரங்களுக்கான கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது விளம்பர திமுக அரசு. ஏற்கனவே பல்வேறு இன்னல்களில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ள பத்திரங்களுக்கான கட்டணம் மேலும் சுமையை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

பத்திரப்பதிவு துறையில், வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இப்படி நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளன. அதனால்தான், கடந்த வருடம் ஏப்ரல் வழிகாட்டி மதிப்பு மாற்றியமைக்கப்பட்டது.

செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் 10 ஆயிரம், முத்திரைத் தீர்வை கட்டணம் 40 ஆயிரம், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் 10 ஆயிரம் என உயர்த்தி கடந்த வருடம் விளம்பர திமுக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதேபோல, ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4 ஆயிரம் என்பது ரூ.10 ஆயிரமாகவும், அதிகபட்ச முத்திரை தீர்வை 25 ஆயிரம் என்பது 40 ஆயிரம் என்றும், தனி மனை பதிவுக்கான கட்டணம் 200 ரூபாய் என்பது 1000 ரூபாய் என்றும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் 10 ஆயிரம் என்பதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் என்றும் தமிழக அரசு கடந்த வருடம் மாற்றி அமைத்திருந்தது.

இந்நிலையில், லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு, கட்டணத்தை உயர்த்தியுள்ளது விளம்பர திமுக அரசு.

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்குவது வழக்கம். இப்படி முத்திரைத்தாள்களை கட்டணம் செலுத்தி வாங்குவதன் மூலமாக அரசு கருவூலத்துக்குத் தேவையான வரியும் கிடைத்து வருகிறது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாய் என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது 100, 200, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு 20 ரூபாய் என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் தற்போது 200 வரை அதிகரித்துள்ளது.

இனிமேல் 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது என்பதால், அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்களை தற்போது உயர்த்தியுள்ளது விளம்பர திமுக அரசு.

Night
Day