பத்திரிகையாளர்களுக்கு நீதி பெற்று தந்த மூத்த வழக்கறிஞர்கள் - பாராட்டு விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி பெற்று தந்த மூத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். வெளியான விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழுவினர் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மூத்த வழக்கறிஞர்கள் பாலு, இளங்கோவன், ஜோதிமணி, விவேகானந்தன், அருண்குமார், சூரிய பிரகாசம் மற்றும் சிவகுமார் ஆகியோர் ஆஜராகி பத்திரிகையாளர்களின் உரிமையை பெற்று தந்தனர். இதையடுத்து நீதியை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Night
Day