பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளை முழுமையாக சென்றடையவில்லை - கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையினால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்திருப்பதாகவும், இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளின் துயர் துடைக்க திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கல்லை என்றும் குற்றம் சாட்டினார். விவசாயிகள், பயிர்க் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு எவ்வித முன்முயற்சியையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

பள்ளிக்கூடங்களில் அமைச்சர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது உள்ளிட்ட திமுக அரசின் செயல்பாடுகளை புரட்சித்தாய் சின்னம்மா வன்மையாகக் கண்டித்தார். தமிழக முதலமைச்சர், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்வதால் எவ்விதப் பயனும் இல்லை என்றும், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி, இறக்கும்போது, கீழே சிதறி, வீணாகும் அரிசியால் ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக, புள்ளிவிவரக் கணக்கு மூலம் தெரியவந்துள்ளதாகவும், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள், பொதுமக்களுக்கு முறையாக விநியோகிக்கப்படவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி நிச்சயம் அமையும் என்றும், புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்தார். 

Night
Day