பரந்தூர் விமான நிலையம் - சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 2-வது விமான நிலையமாக  பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகமான டிட்கோ மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக அப்பகுதி மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Night
Day