பர்கூர் வெப்பாளம்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெப்பாளம்பட்டி இருளர் காலனி பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து, அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து வெப்பாளம்பட்டி பகுதியில் மழை வெள்ளத்தால் விளைநிலங்களில் நீரில் மூழ்கி சேதமடைந்த, அறுவடைக்‍கு தயாராக இருந்த நெற்பயிர்களை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டார். அப்போது சேத விவரங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்‍கள் வேதனையுடன் தெரிவித்ததை, புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டறிந்தார்.

தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்‍களிடம் வெள்ளபாதிப்புகள் குறித்து கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, அவர்களுக்‍கு சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

Night
Day