பறக்கும் ரயிலில் நேற்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் பயணம் - தெற்கு ரயில்வே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பறக்கும் ரயில்களில் நேற்று மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 92 -ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்  பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இதனால், செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல் , வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய மார்க்கங்களில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  சாதாரண நாட்களில் சென்னை பறக்கும் ரயில்களில் 55 ஆயிரம் மக்கள் பயணிப்பார்கள் என்றும் ஆனால் நேற்று மாலை மட்டும் சுமார் 3 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Night
Day