பறவை காய்ச்சல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் H5N1 பறவை காய்ச்சல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் தொற்றுக்குள்ளாகி இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. H5N1 எனப்படும் அந்த பறவைக் காய்ச்சல் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுவதால் அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர்களும் கால்நடைத்துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டவர்கள் மற்றும் யாருக்காவது பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Night
Day