பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - இன்டர்போல் போலீசை நாட முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க இன்டர்போல் போலீசின் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மர்மநபர்கள் சிலர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக மோப்ப நாய்களுடன் சம்பவ பகுதிகளுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே பள்ளிகளில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும், இது வதந்தி என்றும் காவல்துறையினர் சோதனையில் தெரியவந்தது

அதனை தொடர்ந்து 13 தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார் மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்த மர்மநபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்கலாம் என சென்னை போலீசார் சந்தேக்கின்றனர். இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீசாரை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Night
Day