பள்ளிக்கூடத்தில் மனித கழிவை எரிந்த மர்ம நபர்களால் பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியில் தனியார் பள்ளியில் மனித கழிவுகளை எரிந்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பேட்டை பகுதியில் உள்ள முகமது நயினார் பள்ளிவாசல் சன்னதி தெருவில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூட வாயிற்படியில் நேற்றிரவு மர்ம நபர்கள், மனித கழிவுகளை எரிந்தும், வாந்தி எடுத்தும் வைத்துள்ளனர். இன்று காலை பள்ளியை திறந்தபோது, இதனை கண்டு பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பேட்டை போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாநகராட்சி ஊழியர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து பள்ளிக்கூட வாசற்படியினை சுத்தம் செய்தனர். 

Night
Day