பள்ளிப்பட்டு அருகே தண்ணீர் பந்தல் திறந்த கழக நிர்வாகி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன், தண்ணீர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் மற்றும் அன்னதானம் வழங்கினார். 

பள்ளிப்பட்டு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் தாங்கல் காலனியில் கோடையில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அரசு கொறடாவும், முன்னாள் திருத்தணி எம்எல்ஏவுமான பி.எம். நரசிம்மன், முன்னாள் அரசு வழக்கறிஞர் இ.எம்.எஸ்.நடராஜன், முன்னாள் கூட்டுறவு தலைவர் சு.தனசாமி, கோவிந்தன், சேகர், வழக்கறிஞர் வேலு, வழக்கறிஞர் புருஷோத் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ஜூஸ், மோர், அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Night
Day