பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் தாந்தோணி அருகே அரசு தொடக்கப் பள்ளியில், மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.

காளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை மாணவிகளை கொண்டு தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கல்வி அலுவலர்கள், அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day