பள்ளி அருகே சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் குளம் போல் சாலையில் தேங்கியிருப்பதால் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


 சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதால் பள்ளியில் அமர முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் சாக்கடை அடைப்பை சரி செய்யவில்லை என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக கழிவுநீர் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day