பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்... 7 பேர் கைது - மானாமதுரையில் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாம் மூலம், மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொல்லை எவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது என்பது குறித்து பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்..

தமிழகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி சென்று வரும்போது, 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சுமார் 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது..

மானாமதுரை அருகே இயங்கி வரும் அந்த அரசு நடுநிலைப்பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குழந்தைகள் நல வாரியம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது, யாரேனும் தங்களிடம் தவறுதலாக நடந்துள்ளார்களா என கேட்டப்போது, அங்கிருந்த நான்கு மாணவிகள் எழுந்து தாங்கள் பள்ளி சென்று வரும் போது சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறவே, இது தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.....
 
அதன்பேரில் 7 பேரை கைது செய்த மானாமதுரை மகளிர் காவல் நிலைய போலீசார், தலைமறைவாக உள்ள ஒ!ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் 4 பள்ளி மாணவிகள் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் அளித்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எத்தனை குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற விவரம் முழு விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே, கைதான 7 பேரில் ஒருவரை அந்த கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் சரமாரியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதற்கு காவல்துறை அதிகாரிகளே காரணம் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், தவறு செய்யும் யாராக இருந்தாலும் அவர்களை பாரபட்சம் இன்றி தண்டிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

விளம்பர திமுக ஆட்சியில் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது. ஆகவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day