பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து கடையடைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து கடையடைப்பு போரட்டம் நடைபெற்று வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாக கடைகளை நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. இதனால், அடிவாரப் பகுதியில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மலையடிவாரம் மற்றும் சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தங்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day