பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு - இயக்குநர் மோகன் ஜி கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக கூறியது இணையத்தில் பேசுபொருளானது.

இந்நிலையில், சென்னை ராயாபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரின் கைதுக்கான காரணம் சரியாக தெரியவில்லை என முதலில் கூறப்பட்ட நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து பேசியதற்காக தான் கைது செய்யப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை மோகன் ஜி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day