பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - சிக்கித்தவித்த மேலும் 50 பேர் தமிழகம் வருகை

எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஜம்முகாஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 48 பயணிகள் விமானம் மூலம் பத்திரமாக சென்னை திரும்பினர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அங்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகளை உடனடியாக தமிழகம் அழைத்து வர மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 25 பயணிகள் விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை திரும்பினர். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக டெல்லியில் இருந்து ஹைதராபாத் வழியாக 48 பேர் சென்னை திரும்பினர். இவர்களை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார் வரவேற்றார். இவர்கள் அனைவரும்  சிறப்பு வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது பேசிய பயணிகள், மத்திய  அரசுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் தங்களுக்கு உதவி செய்தார்கள், அவர்கள் அன்பானவர்கள் என்றும், மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் தங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே டெல்லியில் இருந்து மதுரை, கும்பகோணம், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற 25 பயணிகள் விமான மூலமாக இன்று அதிகாலை சென்னை திரும்பினர். இவர்கள் அனைவரும் சிறப்பு வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Night
Day