பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு, அவரது பெயரிலே விருது வழங்குவது கர்நாடக இசை கலைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை எதிர்த்து, சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல், விருது வழங்குமாறும் மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Night
Day