பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டியபோது விபரீதம் - மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டியபோது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பாரதிதாசன் 2-வது தெருவில் சென்னை மெட்ரோ சார்பில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பு என்ற தொழிலாளி புதையுண்டார். சக ஊழியர்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிக்கரணை போலீசார் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் அன்புவை மீட்க முயன்றனர். ஆனால் 2 மணி நேரம் தீவிரமாக போராடி மண்சரிவை அகற்றிய நிலையில், தொழிலாளி அன்பு சடலமாக மீட்கப்பட்டார். 

பின்னர் தொழிலாளி அன்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போதிய பாதுகாப்பு வசதிகளில் இன்றி பணியை மேற்கொண்டதால் அன்பு என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்ததாக முதற்கட்ட விசாணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Night
Day