பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் தான் நிற்க வேண்டும் - நடிகர் சிவகார்த்திகேயன்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுப்பிரணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோயிலுக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிவகார்த்திகேயனுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து முருகனை தரிசித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்க வேண்டும் என சிவகார்த்திகேயன் தெரிவித்யதார்.

Night
Day