எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் இந்தியா 17வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், பாரிஸில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே 2 தங்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள், தற்போது மேலும் பதக்கங்களை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் F64 போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் - இந்திய வீரர் சுமித் அன்டில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாத வகையில் 70.59 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, புதிய பாராலிம்பிக்ஸ் சாதனையை படைத்திருப்பது இந்திய மண்ணிற்கே பெருமையளிக்கிறது என்று புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆடவருக்கான பேட்மிண்டன் SL4 போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதற்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
பேட்மிண்டன் SH6 போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை நித்ய ஸ்ரீ சுமதி சிவன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் - பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைத்து தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ள நித்ய ஸ்ரீ சுமதி சிவனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலப்பு இரட்டையர் காம்பவுன்ட் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் மற்றும் இந்திய வீராங்கனை சீத்தல் தேவி ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.