தமிழகம்
2025-ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு, மஞ்சமலையாற்றில் உள்ள வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடம், பரிசுபொருள் மாடம், ஆகிய இடங்களில் இரண்டடுக்கு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. பாலமேடு ஜல்லிகட்டிற்காக 3 ஆயிரத்து 677 காளைகளும், ஆயிரத்து 412 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். சிறந்த காளைக்கு முதல் பரிசாக ஒரு காரும், மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் வழங்கப்பட உள்ளது. மேலும் 2வது பரிசுபெறும் காளைக்கு கன்று குட்டியுடன், நாட்டு பசுமாடும், இரண்டாம் பரிசு பெறும் வீரருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அப்பாச்சி பைக் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் மாடுபிடியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டில் சுமார் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விட திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட காளைகளும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே ஆடுகளத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகம் செய்துள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர். சுமார் ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீதான தவறான ...