பாலியல் தொல்லை - உதவி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைதான உதவி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு பள்ளி மாணவிகள் 7 பேர், அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், திருமயம் மகளிர் போலீசார்,ஆசிரியர் பெருமாளை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை, பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்

Night
Day