பிஏபி கால்வாய் மூலம் தண்ணீர் முறைகேடு - தட்டிக்‍கேட்ட விவசாயி மீது தாக்‍குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாயி மீது தாக்‍குதல் நடத்திய தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த லீலா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முறைகேடாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து குழாய் அமைத்து தண்ணீர் கொண்டுசெல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆனந்த் என்பவர், சக விவசாயிகளுடன் சென்று தட்டிக்‍ கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லீலா கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பிரதீப் கண்ணன் உள்ளிட்டோர் ஆனந்தை சரமாரியாக தாக்‍கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகாரில் போலீசார் வழக்‍குப்பதிவு செய்து, தாக்‍குதல் நடத்திய 7 பேரை தேடி வருகின்றனர்.

Night
Day