பிரதமர் இன்று தமிழகம் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வர உள்ளதையடுத்து விவேகானந்தர் மண்டபத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயணத்திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்.

பிரதமர் மோடி வியாழக்கிழமை மாலை 3.50 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தரையிறங்குகிறது. பிரதமர் மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தேநீர் அருந்தி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார் பிரதமர் மோடி. அதன்பின் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி. பின்னர் கன்னியாமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் பயணம் செய்கிறார். அங்கு உள்ள தியான மண்டபத்தில் வியாழக்கிழமை முதல் 2 நாட்களுக்கு தியானம் செய்கிறார். பின்னர் ஒன்றாம் தேதி தியான மண்டபத்தில் இருந்து கரைக்கு திரும்பி, அங்கிருந்து மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஹெலிகாப்டர் தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவேகானத்தர் மண்டபத்திற்கு பிரதமர் மோடி செல்லும் பாதையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Night
Day