பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதனை முன்னிட்டு, பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

ஒருநாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி மதியம் 1.15 மணிக்கு மகராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 2.45 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் சென்று மதியம் 3.30 முதல் மாலை 4.15 வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர், மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலைய ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாளை மாலை 5.20 மணிக்கு நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதனையொட்டி, பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மோடி சர்க்கார் என்ற தலைப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் போன்ற பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் நாளை மாலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, மாலை 6.35 மணிக்கு சென்னையில் இருந்து தெலுங்கானாவுக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். 

Night
Day