எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, இன்றும், நாளையும் பங்கேற்கவுள்ளதையொட்டி, முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நாள் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக தமிழகம் வரும் அவர், மதுரையில் தங்கி, ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து நாளை திருநெல்வேலியில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி, நெல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மட்டும் 28-ம் தேதி மாநகர எல்லைக்குள் வராத வகையில் புறவழிச்சாலையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் நடைபெறும் சிறுகுறுநடுத்தர தொழிலதிபா்களுக்கான டிஜிட்டல் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். இதற்காக, அமலாக்கத்துறை ADGP ஜெயராமன் தலைமையில், 7 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார்.