பிறந்து சில நாட்களே ஆன நாய்க்‍குட்டிகளை தூக்கி வீசி எறிந்த கொடூர நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நாய்க்குட்டிகளை கொடூரமாக தூக்கி வீசி எறியும் சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பிராணிகள் ஆர்வலர்களை பதைபதைக்‍க செய்துள்ளது. 


ஆரோவில் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் இயங்கி வரும் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் விலங்குகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கைப்பையில் ஐந்து நாய்க்குட்டிகளை கொண்டு வந்து கொடூரமாக வீசி விட்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து புகார் பேரில் ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குட்டிகளை கொடூரமாக தூக்கி வீசி எறிந்தவர்களை கைது செய்ய வேண்டும் என பிராணிகள் நல ஆர்வலர்கள் கேட்டுக்‍கொண்டுள்ளனர்.

Night
Day