புகார்தாரரை வீடேறிச் சென்று மிரட்டிய திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதி கேட்டு முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் ஆட்சியருக்கு புகாரளித்த நபரின் குடும்பத்தை திமுக ஊராட்சி மன்ற தலைவர், தனது கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாகி உள்ளது.

வளத்தூர் கிராமத்தில், திமுகவைச் சேர்ந்த கீதா என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திமுக பிரமுகரான அவரது கணவர் மகேந்திரன் மற்றும் மகன் சதீஷ்குமார் ஆகியோர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையிடுவதால் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடைபெறாமல் முடங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இவற்றின் மீது நடவடிக்கை எடுக்காததால் அதே கிராமத்தைச் சேர்ந்த பசுபதி என்பவர் இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தபால் மூலம் கடந்த நவம்பர் மாதம் புகார் மனு அனுப்பியுள்ளார். இதையடுத்து அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு ஊராட்சி மன்றத் தலைவர் கீதாவுக்கு, முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கீதா, அவரது கணவர் மகேந்திரன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பசுபதி குடும்பத்தாரை தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Night
Day