புதிய உச்சத்தில் தங்கம் விலை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில், ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று 320 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் சவரனுக்கு 58 ஆயிரத்தை கடந்து 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Night
Day