புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்தவகையில், இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை எவ்வித மாற்றம் இன்றி கிராமுக்கு 103 ரூபாய்க்கும், கிலோவுக்கு  ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

varient
Night
Day