புதிய வினாத்தாளுடன் பி.எட். தேர்வு தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பி.எட். படிப்புக்கான தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட புதிய வினாத்தாள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்த்துறை பல்கலைக்கழகத்தின் பி.எட். 2ம் ஆண்டு 4ம் பருவ தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இன்று படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வு நடைபெறவிருந்தது. இந்நிலையில் இத்தேர்வுக்கான வினாத்தாள் நேற்றே கசிந்தது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதுபோன்று முறைகேடாக முன்கூட்டியே தேர்வர்களிடம் வினாத்தாள் கிடைத்து விடுவதாகவும், B.Ed. பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வு முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்.  

இந்நிலையில், முன்கூட்டியே வெளியான படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் தேர்வுக்கான வினாத்தாளை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் துறை பல்கலைக்கழகம் தெரிவித்தது. 

இதனையடுத்து, தேர்வு தொடங்குவதற்கு முன்பு அனைத்து தேர்வு மையங்களுக்கும் இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டது. இந்த வினாத்தாள் பதவிறக்கம் செய்யப்பட்டு அதன் நகல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

Night
Day