புதுகுப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்குப்பம் பகுதியில் மீனவ மக்களை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். 

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அப்பகுதி மீனவர்கள் வெள்ள பாதிப்புகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் விளக்கிக் கூறினர். அப்போது, கடலுக்கு செல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று மீனவர்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அவர்களது மனக் குமுறல்களை சின்னம்மா தாயுள்ளத்துடன் கேட்டறிந்தார். 

இதனையடுத்து அங்கிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கினார்.

Night
Day