புதுக்கோட்டையில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் - மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள பிரகதாம்பாள் கோவில் தேர் நிறுத்துமிடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. மருத்துவ கழிவுகள் கொட்டுவதற்கான மாநகராட்சி சார்பில் இடம் இருந்தும் அங்கு கொட்டப்படுவதில்லை. இதுகுறித்து மாநகராட்சியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day