எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஏழை, எளிய, சாமானிய மக்கள் ஏற்றம் பெறவும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் முன்னேற்றம் பெறவும், பெண்களுக்கு பாதுகாப்பும், அனைவரும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்ற ஆண்டாக 2025ம் ஆண்டு மலரட்டும் என தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளை புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புதுப்பொலிவுடன் புலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் தனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெறவேண்டும் என்று வாழ்த்தி, புதிய நம்பிக்கைகளைப் பெற்று அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடும் இப்புத்தாண்டில், தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் புதியஆண்டாக மலர ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! எந்த நிலையிலும், எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒரு போதும் விட்டுத்தரமாட்டோம்! உறுதிகொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்! என ஒவ்வொரு இளம் வயதினரும் தங்களது பங்களிப்பை நம் தாயகத்திற்கு அர்ப்பணித்திடும் வகையில் இந்நன்னாளில் உறுதி ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களை நாள்தோறும் கசக்கி பிழிந்த 2024ஆம் ஆண்டு மறைந்து, ஏழை, எளிய, சாமானிய மக்கள் ஏற்றம் பெறவும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் முன்னேற்றம் பெறவும், பெண்களுக்கு பாதுகாப்பும், அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கின்ற ஆண்டாக 2025 ஆம் ஆண்டு மலரட்டும் என தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.