புத்தாண்டு கொண்டாட்டம் - கட்டுப்பாடுகள் என்னென்ன

எழுத்தின் அளவு: அ+ அ-


புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் 2025 புத்தாண்டை கொண்டாட சென்னை முழுவதும் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 

மேலும், காவல் துறையினருக்கு உதவியாக சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது 

சென்னை முழுவதும் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்றும், நாளையும் கடலில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும்,

பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும், காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும் என்றும், மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், 

சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Night
Day