புரட்சித்தலைவரின் 107வது பிறந்த தினம் - புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை தியாகராய நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த புரட்சித்தலைவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை தியாகராய நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


தமிழக சட்டமன்ற முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன், முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், வேலூர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் L.K.M.B.வாசு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வி.ஆர்.வெண்மதி, மதுரவாயல் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆலப்பாக்கம் ஜீவானந்தம், பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர் பூவை து.கந்தன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட MGR இளைஞரணி தலைவர் எல்லாபுரம் எல்.ரஜினி, விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திண்டிவனம் முகமதுஷெரிப், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கழக செயலாளர் பெரியசெவலை ஜெ.குமார், பரங்கிமலை முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மேடவாக்கம் S.காளிதாஸ், 

தென்சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர் வேளச்சேரி S.சின்னதுரை, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சோழவரம் G.ராஜேந்திரன், மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெ.விஜயலக்ஷ்மி, சேலம் மாவட்ட மீனவரணி செயலாளர் எடப்பாடி சுரேஷ், விருகை பகுதி மகளிர் அணி செயலாளர் ஸ்ரீதேவி பாண்டியன், செங்கல்பட்டு சங்கீதா மற்றும் திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புரட்சித் தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்‍கும் புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கினார். 


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அவரது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

Night
Day