புரட்சித்தலைவரின் 108வது பிறந்தநாள் விழா - திருவள்ளூரில் கழக நிர்வாகிகள் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் ஏழை, எளியோருக்கு முன்னாள் அரசு கொறாடா பி.எம்.நரசிம்மன் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறாடா பி.எம்.நரசிம்மன், எல்லாபுரம் எல்.ரஜினி ஆகியோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின். திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழை மக்களுக்கு அன்னதானமும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Night
Day