புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவத்தை கோலமிட்டு மகிழ்ந்த ரசிகர்

எழுத்தின் அளவு: அ+ அ-

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவுநாளையொட்டி மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் அவரது ரசிகர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் எம்ஜிஆரின் திருவுருவத்தை கோலமாக வரைந்து மகிழ்ந்தார்.

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், புதுச்சேரி சட்டசபையில் 35 ஆண்டுகளாக பாதுகாவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது மனைவியுடன் மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள மகளை பார்க்கச் சென்றுள்ளார். இந்நிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி அவர் தனது மகள் மற்றும் மனைவியோடு சேர்ந்து எம்ஜிஆரின் திருவுருவத்தை 5 அடியில் கோலமாக வரைந்து மகிழ்ந்தார். 15 ஆண்டுகளாக எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் குடும்பத்தினருடன் இணைந்து எம்ஜிஆரின் திருவுருவப்படங்களை ஜெயக்குமார் கோலமாக வரைந்து வருகிறார்.

Night
Day