எழுத்தின் அளவு: அ+ அ- அ
புரட்சித்தலைவி அம்மாவின் 77-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, வரும் 24-ஆம் தேதி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா, தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், பெண்ணினத்தை பாதுகாத்திடவும், ஏழை, எளிய,சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் ஆவார். 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று தன் உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற மக்கள் தலைவி, தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வகுத்துக் கொடுத்த பாதையில் அடிபிறழாமல் அதே வழியில் நாமும், தொடர்ந்து பயணித்திடும் வகையில், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் 77-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வருகின்ற 24-ஆம் தேதி, திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள, P.M.T. கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
தமிழக மக்களின் அன்பும், ஆதரவும், எந்நாளும் தொடர்ந்திட, கழக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையோடு, மக்கள் தொண்டாற்றிட, புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடுவோம் என்று, கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியில், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி வழிவந்த கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது