புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா - புரட்சித்தாய் சின்னம்மா உரை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுகவினர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும், கழகம் ஒன்றிணைந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளையொட்டி, ஏழை, எளியோர், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலருக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை சின்னம்மா வழங்கினார்.
 
'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று தாரக மந்திரத்துடன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக அரும்பாடுபட்டு உழைத்த, புரட்சித்தலைவி அம்மாவின் 77வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் P.M.T. கல்லூரி அருகில் அமைக்கப்பட்ட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் உசிலம்பட்டி பகுதி மக்கள் அஇஅதிமுகவுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். 

கழகம் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தொடர்ந்து மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து எடுத்துக்கூறிய புரட்சித்தாய் சின்னம்மா, கழகம் ஒன்றுபட்டு, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அமைக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Night
Day