புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த கருணையுள்ள தலைவி புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 77-வது பிறந்தநாள் விழாவையொட்டி எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த கருணையுள்ள தலைவியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் புரட்சித்தலைவி அம்மா போற்றப்படுகிறார் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். எண்ணற்ற சந்தர்ப்பங்களில் புரட்சித்தலைவி அம்மாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது தமது பாக்கியம் என்றும், புரட்சித்தலைவி அம்மா எப்போதும் மிகவும் அன்பாகவும், மக்கள் சார்ந்த முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தார் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

Night
Day