எழுத்தின் அளவு: அ+ அ- அ
புரட்சித்தலைவி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தன் இறுதிமூச்சு வரை பாடுபட்ட அரும்பெரும் தலைவி, தொண்டர்களின் நலனில் அக்கறை கொண்டு, தன்னலமின்றி பொதுநலத்தோடு "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காக அரும் தொண்டாற்றிய, ஒப்பற்ற மக்கள்தலைவி, புரட்சித்தலைவி அம்மாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் இருந்து புரட்சித்தாய் சின்னம்மா புறப்பட்டார். அப்போது, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சி கோஷமிட்டனர்.
அம்மா நினைவிடம் நோக்கி சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் எழுச்சி முழக்கமிட்டு வரவேற்றனர்.
தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாண்புமிகு அம்மா நினைவிடத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, புரட்சித்தாய் சின்னம்மா மற்றும் அங்கு திரண்டிருந்த கழகத் தொண்டர்கள் அனைவரும், அம்மா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா மற்றும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மாண்புமிகு அம்மா நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்படிருந்த அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்தினார்.
பின்னர், மெரினா கடற்கரையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.