புரட்சித்தாய் சின்னம்மா உதவியால் உயிர்பிழைத்த முதியவர்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களால் மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், உடல்நலம் தேறி தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, நேற்று முன்தினம் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், ​மருத்துவமனையில் இருந்து புரட்சித்தாய் சின்னம்மா புறப்பட்ட போது, அவரது கண் எதிரே சாலையில் மயங்கி விழுந்த மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கணேசனை மீட்டு, உரிய நேரத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் உடல் நலம் தேறி, சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் அவரை புரட்சித்தாய் சின்னம்மா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாலேயே கணேசன் உயிர் பிழைத்ததாக அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Night
Day