புரட்சித்தாய் சின்னம்மா மேற்கொள்ளும் "அம்மாவின் வழியில்" மக்கள் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி மாவட்டத்தில் “அம்மாவின் வழியில் மக்கள் பயணம்” மேற்கொள்ள உள்ளார். புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் பயணத் திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், வருகிற 17ஆம் தேதி தொடங்கி, 20ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தில், “அம்மாவின் வழியில் மக்கள் பயணம்” மேற்கொள்ள உள்ளார். தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் “அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” தொடர்ந்து மேற்கொள்கிறார். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மக்கள் பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார். அதன் படி, 17ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தென்காசி காசிமேஜர்புரம், தென்காசி இலஞ்சி, தென்காசி, கீழப்புலியூர், மேலப்பாட்டாக்குறிச்சி, ஆகிய இடங்களில் புரட்சித்தாய் சின்னம்மா பொதுமக்களை சந்திக்கிறார். தொடர்ந்து சுந்தரபாண்டியபுரத்தில், தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தென்காசி கிழக்குப் பகுதியில் உள்ள 
திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் கழக கொடியை ஏற்றி வைக்கிறார். மேலப்பாவூர் என்ற இடத்தில் பொதுமக்களை சந்திக்கும் புரட்சித்தாய் சின்னம்மா, பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு தொடர்ந்து, கீழப்பாவூர், வெள்ளகால் விலக்கு, துவரங்காடு விலக்கு, குருங்காவனம், சுரண்டை, ஆலங்குளம் வட்டத்தில் உள்ள V.K.புதூர், வீராணம் மற்றும் ஊத்துமலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கிறார். 2ஆம் நாளான 18ஆம் தேதி அன்று, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மாலை 3.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா, பிரானூர் பார்டர் மற்றும் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்களை சந்திக்கிறார். தொடர்ந்து விஸ்வநாதபுரம், தேன்பொத்தை, பண்பொழி, கரிசல் குடியிருப்பு, வடகரை வாவா நகர், குடியிருப்பு விலக்கு, அச்சன்புதூர், இலத்தூர், குத்துக்கல்வலசை, கொடிக்குறிச்சி, நயினாகரம், இடைக்கால், கடையநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி ஆகிய இடங்களில் புரட்சித்தாய் சின்னம்மா பொதுமக்களை சந்திக்கிறார். மூன்றாவது நாளான 19ஆம் தேதி அன்று வாசுதேவ நல்லூர் , சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொள்ளும் சின்னம்மா, மாலை 03.30 மணி அளவில் புளியங்குடியில் உள்ள சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பயணத்தைத் தொடங்குகிறார். முள்ளிகுளம், இருமன்குளம், சங்கரன்கோவில், கரிவலம்வந்த நல்லூர், கலிங்கபட்டி, ஒத்தக்கடை, திருவேங்கடம் ஊமை தலைவன்பட்டி, கரிசல்குளம், பெருங்கோட்டுர், களப்பாகுளம், சண்முக நல்லூர், குருக்கள்பட்டி, திருமலாபுரம், பணவடலிசத்திரம், மருக்கலாங்குளம், வன்னிகோனந்தல் தேவர்குளம் ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்திக்கிறார். நான்காவது நாளான 20ஆம் தேதி அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் புரட்சித்தாய் சின்னம்மா பயணம் மேற்கொள்கிறார். மாலை 3.30 மணி அளவில், தலைவன்கோட்டை பகுதியில் உள்ள தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தாருகாபுரத்தில் பொதுமக்களை சந்திக்கிறார். நெற்கட்டும் செவலில் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் வெள்ளானைக் கோட்டையில் மாவீரர் ஒண்டிவீரன் பகடை மற்றும் மாவீரர் வெண்ணிக்காலாடி ஆகியோரின் நினைவு சின்னங்களுக்கு மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து வாசுதேவநல்லூர், புதூர், உள்ளார், சிவகிரி ஆகிய பகுதிகளில் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் பொதுமக்களை சந்திக்கிறார். கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் “அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில்” கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Night
Day